Posts

Showing posts from 2021

பணம் இல்லாத லோன்!

பொதுவாக பணம் தேவைக்கு தான் லோன் எடுப்பார்கள், ஆனால் இந்த பதிவில் லோன் கணக்கு ஒருவர் செய்யும் தப்புக்காக திறக்கப்படும் என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது  சரி, இந்த லோன் கணக்கில் என்னெல்லாம் நடக்கும் ன்னு பார்க்கலாம்: எப்பொழுதெல்லாம் நாம் ஒரு தப்பு / பாவம் செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஒரு லோன் அக்கௌன்ட் திறக்கப்படும் என்று வைத்துக்கொள்வோம். 1. லோன் என்றாலே அசல் மற்றும் வட்டி என்று இரண்டு விஷயங்கள் உள்ளன. அசல் என்பது நாம் செய்த செயல் - அது தப்பாக இருந்தால் சிறிய தொகை, அது பாவமாக இருந்தால் பெரிய தொகை  2. நாம் செய்த செயலுக்கு அப்பப்போ வட்டி கட்டியாகனும். அது தான் நமக்கு நேரிடும் சிறு சிறு துன்பங்கள்.  3. நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அசலை குறைத்துக்கொண்டு வரும். அசல் குறைய குறைய வட்டியும் குறைய வாய்ப்பு இருக்கு. 4. சில பேர், அசல் தொகையை மறந்து வெறும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் அசல் அப்படியே தான் இருக்கும். இதெல்லாம் லோன் பிளானை பொறுத்து இருக்கு. (பிளான் என்றால் நாம் செய்யும் தப்பின் வகையாக எடுத்துக்கொள்வோம்) 5. சரி, அசல் எப்பொழுது திருப்பி கொடுக்கலாம...

பாரபட்ச மனப்பான்மை

  நான் கிரிக்கெட் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இன்னக்கி நிறைய பேரோட போஸ்ட் 5-1 ல முடிஞ்ச மேட்ச் பத்தி தான் இருந்துச்சு. சில பேரு, பரவால அவங்களும் 1 மேட்ச் ஜெய்க்கட்டும்னு போட்டிருந்தாங்க. சில பேரு, 6-0 ன்னு வரவேண்டியது மிஸ் ஆகிடுச்சுனு போட்டிருந்தாங்க. இன்னும் சில பேரு, வேற லெவல், ஒரு மேட்ச் போனதுக்கு அவ்ளோ புலம்பல். நாம இந்தியர்கள் ன்னு இந்த உணர்வா இல்ல அவங்க ஜெயிச்சிட்டாங்க ன்னு வருத்தமா? ரொம்ப வருஷமா மனசுல இருந்த விஷயம், இன்னக்கி இங்க ஷேர் பண்றேன். நமக்கு புடிச்சவங்க, நாம சப்போர்ட் பண்றவங்க தொடர்ச்சியா ஜெயச்சதை ஏத்துக்குறோம், கொண்டாடுறோம். இதையே நம்ம கூட படிச்சவங்களோ, வேலை பாக்கிறவங்களோ இப்படி வரிசையா ஜெயிச்சா, நம்மல எத்தனை பேரால அத சகிச்சிக்க முடிது? சம்பந்தப்பட்டவங்க மேல கோவம், எரிச்சல், வெறுப்பு, பொறாமை தான் வருதுல? உங்க வீட்டை சேர்ந்த ஒருத்தருக்கு நடந்தா, உங்களுக்கு புடிச்சவங்களுக்கு நடந்தா, அது நல்லது! இதே நீங்க விரும்பாத அல்லது எதிர்பார்க்காத ஒருத்தருக்கு நடந்தா, அது அவங்களுக்கு மட்டும் தான் நல்லது இல்ல? புரிய வேண்டியவங்களுக்கு புரியனும்! தெரிய வேண்டியவர்களுக்கு தெரியணும்! க...

Compare Roles

To Women, Compare your child's father with your father. Compare your mother's husband with your husband. Your father might be a hero to you, but how far he has/had been in your mother's life matters as a husband. Similarly, your husband may be nothing to you, but he could be everything in your child's life. To Men, Compare your child's mother with your mother. Compare your father's wife with your wife. Your mother might be an angel to you, but how far she has/had been in your father's life matters as a wife. Similarly, your wife may be nothing to you, but she could be everything in your child's life. Compare their Roles and NOT themselves!