பாரபட்ச மனப்பான்மை
நான் கிரிக்கெட் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.
இன்னக்கி நிறைய பேரோட போஸ்ட் 5-1 ல முடிஞ்ச மேட்ச் பத்தி தான் இருந்துச்சு.
சில பேரு, பரவால அவங்களும் 1 மேட்ச் ஜெய்க்கட்டும்னு போட்டிருந்தாங்க.
சில பேரு, 6-0 ன்னு வரவேண்டியது மிஸ் ஆகிடுச்சுனு போட்டிருந்தாங்க.
இன்னும் சில பேரு, வேற லெவல், ஒரு மேட்ச் போனதுக்கு அவ்ளோ புலம்பல்.
நாம இந்தியர்கள் ன்னு இந்த உணர்வா இல்ல அவங்க ஜெயிச்சிட்டாங்க ன்னு வருத்தமா?
ரொம்ப வருஷமா மனசுல இருந்த விஷயம், இன்னக்கி இங்க ஷேர் பண்றேன். நமக்கு புடிச்சவங்க, நாம சப்போர்ட் பண்றவங்க தொடர்ச்சியா ஜெயச்சதை ஏத்துக்குறோம், கொண்டாடுறோம்.
இதையே நம்ம கூட படிச்சவங்களோ, வேலை பாக்கிறவங்களோ இப்படி வரிசையா ஜெயிச்சா, நம்மல எத்தனை பேரால அத சகிச்சிக்க முடிது? சம்பந்தப்பட்டவங்க மேல கோவம், எரிச்சல், வெறுப்பு, பொறாமை தான் வருதுல?
உங்க வீட்டை சேர்ந்த ஒருத்தருக்கு நடந்தா, உங்களுக்கு புடிச்சவங்களுக்கு நடந்தா, அது நல்லது! இதே நீங்க விரும்பாத அல்லது எதிர்பார்க்காத ஒருத்தருக்கு நடந்தா, அது அவங்களுக்கு மட்டும் தான் நல்லது இல்ல?
புரிய வேண்டியவங்களுக்கு புரியனும்!
தெரிய வேண்டியவர்களுக்கு தெரியணும்!
கண்டிப்பா ஒருத்தருக்காக மட்டும் சொல்லல, இந்த மனப்பான்மையோடு இருக்குற ஒவ்வொருத்தருக்கும் சமர்ப்பணம்!
Comments
Post a Comment