பணம் இல்லாத லோன்!
பொதுவாக பணம் தேவைக்கு தான் லோன் எடுப்பார்கள், ஆனால் இந்த பதிவில் லோன் கணக்கு ஒருவர் செய்யும் தப்புக்காக திறக்கப்படும் என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது சரி, இந்த லோன் கணக்கில் என்னெல்லாம் நடக்கும் ன்னு பார்க்கலாம்: எப்பொழுதெல்லாம் நாம் ஒரு தப்பு / பாவம் செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஒரு லோன் அக்கௌன்ட் திறக்கப்படும் என்று வைத்துக்கொள்வோம். 1. லோன் என்றாலே அசல் மற்றும் வட்டி என்று இரண்டு விஷயங்கள் உள்ளன. அசல் என்பது நாம் செய்த செயல் - அது தப்பாக இருந்தால் சிறிய தொகை, அது பாவமாக இருந்தால் பெரிய தொகை 2. நாம் செய்த செயலுக்கு அப்பப்போ வட்டி கட்டியாகனும். அது தான் நமக்கு நேரிடும் சிறு சிறு துன்பங்கள். 3. நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அசலை குறைத்துக்கொண்டு வரும். அசல் குறைய குறைய வட்டியும் குறைய வாய்ப்பு இருக்கு. 4. சில பேர், அசல் தொகையை மறந்து வெறும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் அசல் அப்படியே தான் இருக்கும். இதெல்லாம் லோன் பிளானை பொறுத்து இருக்கு. (பிளான் என்றால் நாம் செய்யும் தப்பின் வகையாக எடுத்துக்கொள்வோம்) 5. சரி, அசல் எப்பொழுது திருப்பி கொடுக்கலாம...